வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவங்கள் த.வெ.க.வினருக்கு வழங்க மறுக்கப்படுவதாகவும் தங்களுக்கு ஆதரவான ஜென் இசட் இளைய தலைமுறையினருக்கு வாக்குரிமை கிடைக்காமல் செய்ய சதி நடப்பதாகவும் அக்கட்சித் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வாக்குரிமை இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



















