ஆந்திரா – ஒரிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் போலீசார் மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவர் ஹித்மா, அவருடைய மனைவி உட்பட ஆறு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
ஆந்திரா – ஒரிசா எல்லையில் உள்ள அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் ரொம்பசோடவரம் அருகே இன்று அதிகாலை போலீசாருக்கும் நக்சல்களுக்கும் இடையே வனப்பகுதியில் தீவிர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில் நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தலைவரான ஹித்மா, அவருடைய மனைவி உட்பட 6 நக்சல்கள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய நக்சலைட்டுகள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
துப்பாக்கி சண்டையில் மரணமடைந்த ஹித்மா, ஒரிசா சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போலீசாரை குறிவைத்து நக்சல்கள் நடத்திய பல்வேறு பெரும் தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவர். ஹித்மா மரணம் சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.





















