கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை என்றும், தமிழக அரசு தெளிவான திட்ட அறிக்கை அனுப்பாததே காரணம் என்றும், மாநில பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லையில் இதனை தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த கோவை மக்களுக்கு மெட்ரோ திட்டம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கில், திமுக அரசு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பவில்லை என்று குற்றம்சாட்டினார்.



















