பதவி உயர்வு, ஊதிய முரண்பாட்டைக் களைதல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நில அளவையர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நில அளவையர்களுக்கு குறுவட்ட அளவையர் பதவிஉயர்வு வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிச்சுமையை போக்கி முறைப்படுத்துதல், தனியார் மயமாக்குவதை கைவிடுதல், துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவையர் சங்கத்தினர் கடந்த 18ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.



















