சென்னை ராயப்பேட்டையில் உள்ள, பிரபல தனியார் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில், மின்தூக்கியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்தூக்கி மூன்று தளங்களையும் இணைக்கும் வகையில் இயங்கி வந்ததால், மூன்று தளங்களிலும் உள்ள மின்சார வயர்களில் தீ மளமளவெனப் பரவியது. இதனால், வணிகவளாகம் முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வணிக வளாகத்திற்குள் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ராட்சத இயந்திரங்கள் மூலம், வணிக வளாகத்தின் நான்கு பிரதான வழிகள் வழியாகவும் புகையை வெளியேற்றும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.



















