திமுக-வின் ஒரே குறிக்கோள், சட்டசபைத் தேர்தலைப் பற்றியதுதான் என்றும், அதை நோக்கி தாங்கள் சென்று கொண்டிருப்பதாகவும், அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் 5 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, நடிகர் விஜய் பிஜேபி-யின் “சி” டீம் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம், அவருடைய பேச்சு திமுக-விடம் எடுபடாது என்று கூறினார். விஜய் ஆச்சர்யக் குறியோ, தற்குறியோ எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



















