உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் முழுமையாக கட்டுமானப் பணிகள¢ நிறைவடைந்துள்ள பால ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு, பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற எஞ்சிய பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில் அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, பொதுமக்கள், மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், ராமர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்தியர், வால்மீகி, அகலிகை மற்றும் மாதா சபரி ஆகியோரின் சன்னதிகளுக்குச் சென்று அவர் வழிபாடு செய்தார்.
அயோத்தி ராமர் கோயிலில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதன் அடையாளமாக, அங்குள்ள கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை, பிரதமர் மோடி ஏற்றிவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருப்பது, ராம பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.



















