தமிழகம் முழுவதும் விளையாட்டுத்துறைக்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2 பாயிண்ட் ஓ’ கருத்தரங்கினை தொடங்கி வைத்த அவர் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான மேலாண்மை அமைப்பையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை குறிப்பாக மாற்றுத்திறன் வீரர்களை அரசு அடையாளம் கண்டு வருவதாக கூறினார். இந்த ஆண்டு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு துறைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருவதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.





















