ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI315), புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரும்பிப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான இது, காலை 12:16 மணிக்கு (ஹாங்காங் நேரம்) புறப்பட்டு, 22,000 அடி உயரத்தில் பறந்தபோது, விமானி தொழில்நுட்ப பிரச்சினையைக் கண்டறிந்தார். “மேலும் தொடர விரும்பவில்லை,” என விமானி வான்வழி கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவித்ததாக ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. விமானம் பிற்பகல் 1:15 மணியளவில் ஹாங்காங்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “AI315 விமானம் ஜூன் 16, 2025 அன்று புறப்பட்டபிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹாங்காங்கிற்கு திரும்பியது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது மற்றும் முன்னெச்சரிக்கையாக ஆய்வு செய்யப்படுகிறது. பயணிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோளாறின் தன்மைகுறித்து விரிவான விசாரணை நடைபெறுகிறது.