சென்னை அண்ணா நகரில் சங்க ர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கட்டிடத்தைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (18-06-2025) திறந்து வைத்தார். விழாவில் அகாடமி இயக்குநர் வைஷ்ணவி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தால் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். “கல்வியால் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மக்களுக்குச் சேவையாற்றுகின்றனர். இந்தத் திட்டத்தால் பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது தமிழ்நாட்டிற்கு பெருமை,” என்றார்.
“நான் முதல்வன்” திட்டம்
2022இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. 2025 யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற பலர் தேர்ச்சி பெற்றனர். சென்னை, சேலம், விருதுநகரில் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன; விரைவில் கோவை, மதுரையிலும் தொடங்கப்படவுள்ளன.
மேலும் ‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாடு இளைஞர்களைக் குடிமைப் பணிகளுக்குத் தயார்படுத்தி, புதிய உச்சங்களை எட்ட உதவுகிறது. சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கட்டிடம், இளைஞர்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.