தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில், இன்று காலை பலத்த மழை பெய்தது. காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆலந்தலை, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதியில், சுமார் 3 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது.
திருச்செந்தூர் பிரதான வீதி, டி.பி. ரோடு, டைட்டானிக் பஜார் ஆகிய பகுதிகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.



















