ஜாதிய அடையாளத்தை அழிக்க தொடர்ந்து போராடி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் களம் புதிது அமைப்பின் சார்பில் திருமாவளவனுக்கு தமிழ் பேராளுமை விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தமக்கு அளிக்கும் விருதுகள் தன்னுள் உள்ள போராட்ட குணம் நெருப்பை மேலும் அதிகரிக்கும் தவிர தலைகானத்தை அல்ல என்றார்.


















