மதுரை சிந்தாமணியில் உள்ள நட்சத்திர விடுதியில் 300 கிலோ பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சியில் வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி மதுரை மாவட்டம் சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
80 கிலோ எடை கொண்ட உலர் பழங்கள் மற்றும் உயர் ரக மது பானங்கள் கொண்டு பதப்படுத்தப்பட்ட பழ கலவைகள் மூலம் 300 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனி, இத்தாலி, கவிடன் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் கலந்து கொணடனர். இந்த கேக் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.



















