சிதம்பரம் அருகே தனியார் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து வந்த பேருந்து ஓட்டுனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் விபத்தில் சிக்கிய மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 130 மாணவர்களை இரண்டு பேருந்துகளில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து வந்தனர்.
சுற்றுலா முடிந்து பேருந்து கிளம்பிய நிலையில் ஓட்டுனர் தினகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலில் சேற்றில் சிக்கி நின்றது,இதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.



















