பாஜகவின் முழு கட்டுப்பாட்டிற்கு தேர்தல் ஆணையம் சென்று விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர் பணிகளை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸில் பயிற்சி பெற்றவர்கள் தான் தேர்தல் ஆணையத்தில் ஆணையர்களாக இருப்பதாக குற்றம் சாட்டினார். தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.


















