நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்துப் போலிசார் சோதனை நடத்தினார்கள்.
நடிகர் அஜித்குமாருக்கு சொந்தமான சென்னை திருவான்மியூர் இல்லம் மற்றும் அக்கரையில் உள்ள இல்லம் ஆகிய இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியிருந்தார். அதேபோன்று அமைச்சர் மா.சுப்ரமணியம், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரது வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்திருந்தது. இதையடுத்து 4 இடங்களிலும் போலிசார் வெடிகுண்டு நிபுணர்களையும், மோப்ப நாய்களையும் வரவழைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும் இந்தச் சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.



















