தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் தரும் பிஜேபியின் எஸ்.ஐ.ஆர்-ஐ கண்டிக்க திராணியில்லாமல் எடப்பாடி பழனிசாமி வக்காலத்து வாங்கி கொண்டிருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை. மக்கள் மனதிலும் இல்லை என்ற போதும், ‘நானும் ரவுடி தான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை? என்று வாண்ட்-டடாக வண்டியில் ஏறுகிறார் என ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் வழியாகத் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கப் பாசிச பாஜகவும். அடிமை அதிமுகவும் போட்ட சதிக்கு எதிராக. திமுக எடுத்துவரும் உறுதிமிக்க நடவடிக்கைகள், பழனிசாமியை ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எத்தனை தில்லு முல்லுகளைச் செய்தாலும் சரி, எத்தனைக் குறுக்கு வழிகளில் வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் பிஜேபியின் எந்தச் சித்து விளையாட்டும் வெற்றிபெறாது. பழனிசாமியின் பகல் கனவும் பலிக்காது என்று அவர் கூறியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஒருபக்கம் சட்டப்போராட்டத்தையும், மறுபக்கம் மக்கள் போராட்டத்தையும் திமுக நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இதில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிபோடாத எடப்பாடி பழனிசாமி. பாஜகவிற்காக முட்டுக்கொடுக்க மட்டும் ஓடோடி வருவதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.


















