முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தொடர்பான, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு சொந்தமான 11 புள்ளி 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுக்கு சொந்தமான 6 புள்ளி 64 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் அடங்கும்.
ஆன்லைன் பந்தயத் தளத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் இவர்கள் விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






















