இந்தோனேசியாவில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தை குண்டுவெடித்து தாக்கியதில் 54 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் கலபா கார்டிங் பகுதியில், இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியும், அதனுள் மதப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில், இந்த மத வழிபாட்டு தலத்தில் ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென குண்டு வெடித்ததால், வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மதப்பள்ளி மாணவர்கள் உள்பட 54 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






















