சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் 61 வயதுடைய பிரான்சிஸ் என்பவர் முளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் சேதம் அடைந்திருப்பதனால் இதய அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே வேறொரு மருத்துவமனையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனைக்கு வந்த பிரான்சிசை காப்பாற்ற சிம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதிய யுக்தியை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்…
இதன் வாயிலாக ஒரே சிகிச்சை அமர்வில் (இன்ட்ரா ஆப்பரேட்டிவ் டிரான்ஸ் கதீட்ரல் அயோத்திக் வாழ்வு ரீப்ளேஸ்மென்ட் மற்றும் ப்ரோஸன் எலிபென்ட் ட்ரங்க்) இரு வேறு அறுவை சிகிச்சை செய்து சாத்தியப்படுத்தி உள்ளனர் சிம்ஸ் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள். இது இந்தியாவிலேய முதல்முறையாக நடத்தப்பட்ட இதய அறுவை சிகிச்சையெனக் குறிப்பிட்டுள்ளனர்…
61 வயது நிரம்பிய முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை 10 மணி நேரத்தில் நடத்தி முடித்துள்ளனர் அறுவை சிகிச்சையின்போது 4 மணி நேரத்திற்கும் மேலாக இதயம் நுரையீரல் பைபாஸ் நிலையில் இருந்ததாகவும் மற்றும் 2 மணி நேரத்திற்கு மேலாக இதய செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் இப்பொழுது பிரன்ஸிஸ் நலமாக உள்ளாரெனத் தெரிவித்தனர்.