பி.எல்.ஓக்கள் பணிப் புறக்கணிப்பால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,
எஸ்.ஐ.ஆர் முறையில் விநியோகிக்கப்படும், கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. இதற்கு பி.எல்.ஓக்கள் எனப்படும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் சுமை ஏற்படுவதாக குற்றம்சாட்டி, பி.எல்.ஓக்கள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளனர். இதனால், சில இடங்களில் படிவங்களை வழங்குதல், பூர்த்தி செய்தல், பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்காளர்களின் சந்தேகங்களை கலைந்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது அளிக்க, வாக்காளர் உதவி மையங்களை தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் இன்று தொடங்கியுள்ளது. வரும் 25ம் தேதி வரை 8 நாட்கள் இந்த உதவி மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற இந்த உதவி மையத்தில், வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, வாக்குச்சாவடி நிலை அலுவர்களின் வழிகாட்டுதலுடன் படிவங்களை பூர்த்தி செய்தனர்.



















