திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் பதவிகள் பறிக்கப்படும் என மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
2026 தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக. “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக, நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாக கலந்துரையாடி வருகிறார்.
அதன்படி இன்று திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் உள்ள குழப்பங்களினால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.



















