நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் புதிதாக ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்க ஆனது அமைய உள்ளது. இந்த நிலையில் டைட்டில் பார்க்க அமைய உள்ள இடத்தை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சுமார் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்கிற்கு நாளைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.
ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டைட்டில் பார்க்க மூலம் 600க்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் பயனடைவார்கள்.
கல்லூரிக்கு தனி நுழைவாயிலும்,மினி டைட்டில் பார்க்கிற்கு தனி நுழைவாயிலும் அமைய உள்ளது.இதனால் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது அதேபோல டைட்டில் பார்க்க சுற்றி சுற்றுச்சுவர் அமையுள்ளது.
அமைச்சர் தங்கமணி மினி டைட்டில் பார்க் கட்டப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்த நிலையில் அதற்கு எம்.பி KRN.ராஜேஷ்குமார் கூறுகையில்,
முன்னாள் அமைச்சர் தங்கமணி தொழில் துறை அமைச்சராக இருந்தவர் அவருக்கு நன்றாக தெரியும் டைட்டில் பார்க் அமையும் இடத்தில் போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடமாக இருக்க வேண்டும்,அது போன்றுதான் தற்போது இந்த இடத்தில் அமையுள்ளது.
அவர் நீதிமன்றத்தை நாடுவேன் என கூறினார் இதற்கு முன்னால் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தை நாடி 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினார் நன்றாகவே அமைச்சருக்கு தங்கமணிக்கு தெரியும் அதுபோல்தான் இதுவும்.
மூன்றடுக்கு கட்டிட வசதிகளுடன் மினி டைட்டில் பார்க் கட்டப்படும் இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.
விளையாட்டு மைதானத்தில் டைட்டில் பார்க் அமையவில்லை விளையாட்டு மைதானம் தனியாக உள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் தெரிவித்தார்…



















