பசிபிக் பெருங்கடலில் உருவான கால்மோகி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மாகணத்தை மணிக்கு 220 கி.மீ வேகத்தில் கடந்ததது. அப்போது, சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கடலோர மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்டவற்றில் பலத்த மழை கொட்டியது.
இதனால் அங்குள்ள பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தது. 7 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.






















