பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
(பி.ஓ.எல். ஜாக்டோ ஜியோ)
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.


















