திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, விவாதிக்கப்பட உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும், இதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.



















