மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆயுதக்குழுக்களால் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலியில் உள்ள தனியார் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்தியா தொழிலாளர்கள் 5 பேரை ஒரு ஆயுதக் குழு இரு தினங்களுக்கு முன் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் மாலியில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கடத்தப்பட்ட இந்தியர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்ட்ம் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, கண்மணியாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அவர்களை பத்திரமாக மீட்கவேண்டும் என்று உறவினர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



















