1990ம் ஆண்டு ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வி. சேகர் அறிமுகமானார். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம், பொறந்த வீடா புகுந்த வீடா, காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல், வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பிடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் உள்ளிட்ட 18 படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான்களான வடிவேலு மற்றும் விவேக்கை இணைந்து நடிக்க வைத்து அவர்களுக்கு என்று ஒரு பாடலை உருவாக்கி அதை ஹிட் ஆக்கியவர் இவர்தான். கடைசியாக தன் மகனை ஹீரோவாக வைத்து சரவண பொய்கை என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. இயக்குநர் வி. சேகரின் மறைவுக்கு ரசிகர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

















