திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது 93-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரும் கி.வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே, தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


















