டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை அடுத்து, திறந்தவெளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை தள்ளிவைக்குமாறு கல்வி நிலையங்களுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லில் காற்றின் மாசுபாடு மிகக் கடுமையாக இருப்பதால், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது பற்றி உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது. இதையடுத்து, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகளை, தள்ளிவைக்குமாறு, பள்ளிகளுக்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு, இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.






















