நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்திருப்பதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கோ, துணிதுவைப்பதற்கோ இறங்க வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
(தென்காசி பைல்)
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில், தூண்டில் வளைவையும், தாண்டி தண்ணீர் விழுவதால், அங்கு பொது மக்கள் 2-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், ஐந்தருவியிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்த வந்த பலர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



















