உலக டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய இணை முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான டேபிள் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சிட்டாலே- மனுஷ் ஷா இணை, முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்த தொடரின் இறுதி போட்டியை பொறுத்தவரையில், இந்தியாவுடன் மோதும் மற்றொரு அணி எது என்பதனை தீர்மானிக்கும் மற்றொரு அரையிறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதில் உலகின் நம்பர் ஒன் வீரரான சீனாவின் குவாய் மன்- லின் ஷிடோங் இணையும், ஹாங்காங்கின் வோங் சுன் டிங் – டோ ஹோய் கெம் இணையும் விளையாடவுள்ளது.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்றாலும், இறுதி போட்டியில், இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.





















