விமானங்கள் ரத்து காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்க இண்டிகோ நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ நெருக்கடி குறித்து நீதி விசாரணைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்தது நீதிமன்றத்தை கவலையடைய செய்ததாகவும், இதற்கான உரிய இழப்பீட்டை இண்டிகோ நிறுவனம் வழங்கியே தீரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மத்தியக் குழுவின் அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.



















