நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின்போது விளக்கமளித்து பேசினார்.
அப்போது, எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, விவாதத்தில் இருந்து ஒருபோதும் விலகவில்லை என்றும் கூறினார்.
அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ் தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு, எஸ்.ஐ.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றும், இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் வாக்கு பதிவில் ஈடுபட வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நேருவும், இந்திராவும் தான் வாக்குத் திருட்டை அறிமுகப்படுத்தியதாகவும், இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தி வாக்களித்ததாகவும் குற்றம்சாட்டினார். தேர்தல் வெற்றிபெற்றால் தேர்தல் ஆணையத்தை பாராட்டுவதும், தோற்றால் திட்டுவதும் காங்கிரஸின் வழக்கம் என்றும் அமித்ஷா விமர்சித்தார்.
(வெயிட்..பைட்..அமித்ஷா – மத்திய உள்துறை அமைச்சர்)
இதனிடையே அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.






















