கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்கும் நிலையில், த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் நிர்மல் குமார் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரையின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு, கடந்த 17-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
இதுதவிர, கரூர் மாவட்ட த.வெ.ப செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.


















