ஆம்னிப் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை உடனடியாக தமிழக அரசு அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்சினைக்குத் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடபபாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிக சாலை வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்த¤ல் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கத்தை அதன் உரிமையாளர்கள் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக, வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்காததால் மிகுந்த இன்னலுக்க ஆளாகி வருவதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

















