திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தீர்ப்பில் மத நல்லிணெக்கத்தை ஒரு பொருட்டாகவே நீதிபதி சுவாமிநாதன் பார்க்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அவர் வழக்குகளை விசாரித்த முறையே சரியல்ல என்று கூறிய அரி பரந்தாமன், வழக்கு எதுவும் போடாமல் 144 தடை உத்தரவை எப்படி ரத்து செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். எச்,ராஜா, ஆளுநர் ஆர்.என்.ரவி போல நீதிபதி செயல்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



















