மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தனி வழக்கு தொடர தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் தனபாலன் மேகதாது அணை கட்டுமானம் நடைபெற்றால் தமிழகத்தில் மூன்று வேளை உணவு உற்பத்தியில் இரண்டு வேளை உணவு உற்பத்தி கேள்விக்குறியாகும் என்றும், சென்னை உட்பட 19 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



















