மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள படம் “படை தலைவன்”. இந்தப் படத்தை அன்பு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.
காட்டு யானைகளின் வாழ்வியல் மற்றும் அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரும், பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
போதிய தியேட்டர்கள் இல்லாததால் இதற்கு முன் இரண்டு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இப்படம் ஜூன் 13ஆம் தேதி, தமிழகமெங்கும் 500 தியேட்டர்களில் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை “கேப்டன் சினி கிரியேஷன்ஸ்”, எல்.கே. சுதீஷ் பெற்றுள்ளார்.
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படம், வெற்றியைத் தந்திடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.