பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் பயணத்தின் இரண்டாம் கட்டமாக ஜோர்டானில் இருந்து எத்தியோப்பியா புறப்பட்டுச் சென்றார். தீவிரவாத எதிர்ப்பில் இந்தியாவும், ஜோர்டானும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று ஜோர்டான் சென்று, அந்நாட்டு மன்னரை சந்தித்து, இருதரப்பு நல்லுறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து, இரண்டாம் நாளாக இன்று, ஜோர்டான் இளவரசர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன், பிரதமர் மோடியை அம்மான் நகரில் உள்ள அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து, ஜோர்டான் இளவசரர் அல்ஹூசேன் பின் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அம்மானில் உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஜோர்டான் இளவரசருடன் மோடி சென்று பார்வையிட்டார். அங்குள்ள ஜோர்டான் நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைத்ததற்காக இளவரசருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் மோடியின் ஜோர்டான் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு நாடுகளுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் நீனா மல்ஹோத்ரா, தீவிரவாத ஒழிப்பிலும் டிஜிட்டல் பொது கட்டமைப்பிலும் இந்தியாவும், ஜோர்டானும் ஆழமான நல்லுறவுகளை வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
(வெயிட்..பைட்..நீனா மல்ஹோத்ரா,வெளியுறவுத்துறை செயலாளர்)
ஜோர்டான் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி எத்தியோப்பியா புறப்பட்டுச் சென்றார்.மோடிக்கு சிறப்பான வரவேற்பளிக்க அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தயாராக உள்ளனர். இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.






















