வந்தே மாதரம் பாடலின் பின்னனி, முஸ்லிம் மக்களை வெறுப்பூட்டுவதாக உள்ளது என நேரு கடிதம் எழுதியாக பிரதமர் மோடி கூறியுள்ள குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். அப்போது, வந்தே மாதரம் பாடல் தொடர்பாக, 1937ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சுபாஷ் சந்திர போஸீக்கு, ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தின், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே பிரதமர் வாசித்து காண்பித்திருப்பதாகக் குறிப்பிட்டார். வந்த மாதரம் பாடலில் சில பகுதிகளுக்கான எதிர்ப்பு என்பது, மதவாதிகளால் உருவாக்கப்பட்டது என நேரு எழுதியுள்ளார். ஆனால், பிரதமர் மோடி அதை வாசிக்கவில்லை என பிரியங்கா கூறினார்.






















