புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததப் பணிகளுக்குப் பின்னர், வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் அடுத்தாண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்த வாக்காளர்களில் 10 சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.






















