சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள காங்கிரஸ் பாதயாத்திரைகளில் பங்கேற்க, அடுத்த மாதம் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியினரும் மக்கள் சந்திப்பு பிரசார பயணங்களை திட்டமிட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரைகளில் பங்கேற்க உள்ளார். இப்பணிகளை ஒருங்கிணைக்க, மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல இடங்களில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணிகள் நடத்தப்பட உள்ளன. இப்பணிகளை ஒருங்கிணைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

















