பீகார் தேர்தல் முடிவுகளால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கீழ்நிலைக்கு சென்றுவிட்டதாகவும், இது அனைவருக்குமான பாடம் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணி, தெளிவான அரசியல் பார்வை மற்றும் கடைசி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புள்ள மேலாண்மை ஆகியவற்றை, பீகார் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
இண்டியா கூட்டணியின் தலைவர்கள், இந்த செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஆர்.ஐ. மூலம் தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவாக உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க பிஜேபி சதி செய்து வருவதாக, குற்றம்சாட்டினார்.



















