இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மீண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
கடந்த மாதம் 23ம் தேதி அவருக்கு நடைபெறவிருந்த திருமணம் திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இதனால் அமைதியாக இருந்த மந்தனா, மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தயாராகி வருகிறார்.
ஸ்மிரிதி மந்தனா தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவரது சகோதரர் சிரவண் மந்தனா, இதயம் சிம்பளையும் அதில் இணைத்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர் வரும் 21ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக தொடங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் பங்கேற்க உள்ளார்.



















