நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படம், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு “கருப்பு” என ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளான ஜூன் 20, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு “கருப்பு” என அறிவிக்கப்பட்டு, போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் சூர்யா அறிவாளுடன் நிற்க, பின்னணியில் சிவப்பு நிறமும் குதிரையும் இடம்பெற்று ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.இதில் சூர்யா, த்ரிஷா (கதாநாயகி), யோகி பாபு, நட்டி நடராஜ், ஸ்வாஸிகா, சிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு, தென்மாவட்ட கிராமத்து பின்னணியில் கருப்பசாமி வழிபாட்டுடன் கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.சென்னை ECR-ல் திருவிழா செட், பிரசாத் லேப் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து, இறுதிக்கட்டத்தில் உள்ளது. சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்; ஒளிப்பதிவு ஜி.கே. விஷ்ணு.சூர்யாவின் “ரெட்ரோ” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், “கருப்பு” படம்மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது. ஆர்.ஜே. பாலாஜி, சூர்யாவின் கதையை 30 நிமிடத்தில் கேட்டு உடனே ஒப்புதல் அளித்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.படம் 2025 அக்டோபர் அல்லது தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரலாம். சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23, 2025 அன்று டீசர் வெளியாக வாய்ப்புள்ளதக ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. “கருப்பு” படத்தின் தலைப்பு அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா-த்ரிஷா ஜோடி, ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கம் மற்றும் கிராமிய பின்னணி இப்படத்தை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக மாற்றியுள்ளது.