தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்றும் எத்தனை ஷாக்கள் வந்தாலும், கருப்பு, சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி அளவில், ஒவ்வொரு தொண்டரையும் உற்சாகப்படுத்தும் வகையில், வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையை தமிழகம் முழுவதும் திமுக, இன்று முதல் தொடங்கியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை 122-வது வார்டுக்கு உட்பட்ட முதல் தெருவில் நடைபெற்ற வாக்குச்சாவடி பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அங்கிருந்த பாக முகவர்களுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, தங்களது பாகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பரப்புரை கூட்டத்தை முதலமைச்சர் நேரடியாக பார்வையிட்டது மிகுந்த ஊக்கம் அளிப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.



















