மலையாளத் திரையுலகில் உருவாகி வரும் சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் திரைப்படத்தில் நடிகர் தக்ஷன் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் தக்ஷன் விஜய் குத்துவிளக்கேற்றி, படத்தின் பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.தக்ஷன் விஜய் ஏற்கனவே மலையாளத்தில் இத்திகர கொம்பன் என்ற படத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றவர். அதேபோல், தமிழில் கபளிஹரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
இவரது யதார்த்தமான நடிப்பைப் பார்த்த சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் படக்குழு, இந்தக் கதாபாத்திரத்துக்குத் தக்ஷன் விஜய் மிகப் பொருத்தமானவர் என முடிவு செய்து, இவரைத் தேர்வு செய்தது. இப்படம் தக்ஷன் விஜயின் இரண்டாவது மலையாளத் திரைப்படமாக அமைகிறது.இதற்கிடையில், தமிழில் தக்ஷன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஐ அம்வெயிட்டிங் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் தக்ஷன் விஜய், அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறார். இவரது எதிர்காலப் பயணம் திரையுலகில் புதிய மைல்கற்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.