2026 தேர்தலில் திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகிய பின்னர் பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். இருப்பினும், டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தான் தங்களது கூட்டணி நிலைப்பாடு பற்றி அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் காண்டார். த.வெ.க தலைமையில் வலிமையான கூட்டணி அமைந்தால், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அக்கட்சிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக நிர்வாகிகள் திமுகவில் போய் சேருவது வருத்தமளிப்பதாக கூறிய டிடிவி தினகரன், இதற்கு எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளே காரணம் என்றும் தெரிவித்தார்.



















