அரசியலில் ஆத்திச்சூடி தெரியாதவர் விஜய் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதிமுக நிர்வாகக்குழு கூட்டம். அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய வைகோ, 2011 தேர்தலில் ஓபிஎஸ் செய்த குளறுபடியால், அதிமுக-வுடன் கூட்டணி அமையாமல் போனதாக தெரிவித்தார். அப்போது செய்த தவறுக்கு, ஓபிஎஸ் தற்போது அனுபவிக்கிறார் என்றும் கூறினார். தற்போது திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய நிலை இருப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுகவுக்கும், த.வெ.கவுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறியிருப்பது பற்றி பேசிய வைகோ, காகித கப்பலில் அவர் கடல் தாண்ட நினைப்பதாகவும், அவரது கனவு பலிக்காது என்றும் திட்டவட்டமாக கூறினார்.



















